Patient-Centered
Excellence
Rapid Response
Ambulance Services
24/7 Lab & Radiology
Services

Pregnancy Symptoms in Tamil: கர்ப்பம் மற்றும் அதன் அறிகுறிகள் தமிழில்

கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் மற்றும் மனதில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாறுதல்கள் ஹோர்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றன. மேலும், இந்த அறிகுறிகள் அவர்களின் உடல்நிலையை பொருத்து மாறுபடலாம்.

கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளில் பெண்கள் தவறிய மாதவிடாய், மார்பக மாற்றங்கள், சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாந்தி மற்றும் வாந்தி உணர்வு (காலை நோய்) அடங்கும். இருப்பினும், இந்த அறிகுறிகள் பிற காரணிகளால் கூட ஏற்படக்கூடும். எனவே, நீங்கள் கர்ப்பமாக இருப்பதாக சந்தேகித்தால், வீட்டிலேயே ஒரு கர்ப்ப பரிசோதனை செய்தபின் மருத்துவரை அணுகுங்கள்.

கர்ப்பத்தின் பிற்பகுதியில் உங்கள் உடலில் முதுகுவலி, தலைவலி, அஜீரணம் மற்றும் மனநிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும். இங்கு நாம் அறிவியல் பூர்வமாக பல்வேறு கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளை தெளிவாகப் பார்ப்போம்.

Pregnancy Symptoms in Tamil Before Missed Period – அறிய வேண்டியவை

குமட்டல் மற்றும் வாந்தி

காலை குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பெரும்பாலான பெண்களிடம் காணப்படும். குமட்டல், வாந்தி மற்றும் பசியின்மை ஆகிய அறிகுறிகள் நாளின் எந்த நேரத்திலும் ஏற்படலாம்.

இந்த அறிகுறிகள் முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு குறையக்கூடும், ஆனால் சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொடரலாம். இந்த அறிகுறிகள் அனைத்தையும் பாரம்பரிய மருத்துவம் மூலம் குறைக்கலாம்.

உணவு பழக்க மாற்றங்கள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சில உணவுகள் உட்கொள்ள ஆசை ஏற்படும் அல்லது சில உணவுகள் மீது வெறுப்பு ஏற்படக் கூடும். இந்த உணர்வுகள் உடல் சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. ஆதலால் எப்போதும் பலவகை சத்தான உணவுகளை உட்கொள்வது நல்லது.

சோர்வு – உடல் புத்துணர்ச்சி தேவைப்படும் நேரம்

கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் களைப்படைவது சாதாரணமான ஒன்றாகும். இது பெரும்பாலும் புரோஜெஸ்ட்ரோனின் ஹார்மோன் உயர்வால் ஏற்படலாம். இந்த ஹார்மோன் கர்ப்பத்தை பராமரித்து குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

சில நேரங்களில் கர்ப்ப காலத்தில் ஏற்படும் களைப்பு இரத்தச்சோகையினால் கூட ஏற்படலாம். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது மற்றும் போதுமான ஓய்வு எடுத்துக்கொள்வது அவசியம்.

Early Pregnancy Symptoms in Tamil – அறிய வேண்டியவை

மாதவிடாய் தவறுதல் – ஆரம்ப அறிகுறி

பெரும்பாலும் கர்ப்பத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பெண்களுக்கு மாதவிடாய் தவறுதல் காணப்படும். கருத்தரித்த பிறகு பெண்களின் உடலில் ஹூமன் கோரியோனிக் கோனடோட்ரோபின் (hCG) ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஹார்மோன் கரு வளர்ச்சியை ஆதரிக்கிறது.

சில நேரங்களில் சில பெண்களுக்கு லேசான இரத்தப்போக்கு ஏற்படலாம், இதை ‘இம்பிளாண்டேஷன் ப்ளீடிங்’ என்பர். இது கருத்தரித்த பின் சில நாட்களுக்கு மட்டும் காணக்கூடும், ஆனால் இது மாதவிடாய் அல்ல.

மார்பக மாற்றங்கள்

கருவுற்ற காலத்தில் மார்பகங்களில் வலி மற்றும் சில மாற்றங்கள் ஏற்படும், இது உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் அளவுகள் அதிகரிப்பதால் ஏற்படுகின்றன.

இது உங்கள் உடலை கர்ப்பத்திற்கு தயார்படுத்துகிறது. இந்தக் கட்டத்தில் காரமான உணவுகளைத் தவிர்ப்பது உடலுக்கு நல்லது.

அதிக சிறுநீர் கழித்தல்

கர்ப்ப காலத்தில், உடலில் உள்ள திரவங்கள் அதிகரிக்கின்றன, மேலும் சிறுநீரகங்கள் அதிக திறனுடன் செயல்படுகின்றன. கருப்பை வளரும்போது அது சிறுநீரகம் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, நீங்கள் கர்ப்பம் தரித்த முதல் சில வாரங்களிலேயே அடிக்கடி சிறுநீர்ப்போக்கை அனுபவிக்கத் தொடங்குவீர்கள்.

மனநிலை மாற்றங்கள்

கருவுற்ற காலத்தில் பெண்கள் மகிழ்ச்சி மற்றும் திருப்தி போன்ற நல்ல உணர்வுகளையும் அனுபவிக்கலாம். அல்லது சில நேரங்களில் பெண்களுக்கு கோபம், எரிச்சல், துக்கம், கவலை, அல்லது மன அழுத்தம் போன்ற மனநிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

இது ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகிறது. மன அழுத்தம் (டிப்பிரஷன்) அதிகமாக இருக்கும் பெண்கள் மருத்துவ ஆலோசனை பெறுதல் மிக அவசியம்.

மூச்சுத் திணறல்

மூச்சுத் திணறல் என்பது கர்ப்பத்தின் ஒரு அறிகுறியாகும், இது புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோனால் ஏற்படுகிறது. இந்த ஹார்மோன் மூச்சுக்குழாய்களை விரிவாக்கி, வளர்ந்து வரும் குழந்தைக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்க உதவுகிறது.

கர்ப்பிணிப் பெண்களில் மூச்சுத் திணறல் ஏற்படுவதால், அம்மாவும் குழந்தையும் உடலில் உள்ள கார்பன் டைஆக்ஸைடை விரைவாக வெளியேற்றும், இதுவும் மூச்சு வாங்கல் அதிகரிக்க காரணமாகிறது.

மேலும் கரு வளரும்போது உதரவிதானத்தின்மேல் (diaphragm) அழுத்தம் ஏற்படுவதால் கூட சகஜமாக சுவாசிக்க சிரமம் ஏற்படலாம். இதனால் மூச்சு வீதம் அதிகரிக்கலாம் அல்லது ஆழமான மூச்சு வாங்கும் தேவை அதிகரிக்கலாம்.

வயிற்று வீக்கம் மற்றும் மலச்சிக்கல்

வயிற்றில் வீக்கம் மற்றும் மலச்சிக்கல் புரோஜெஸ்ட்ரோன் அதிகரிப்பினால் ஏற்படக்கூடும். மேலும், குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப கருப்பை பெரிதாகும் போது, அது குடல்களின் இயல்பான இயக்கத்தை பாதிக்கிறது.

கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலை சமாளிக்க லேசான உடற்பயிற்சி செய்வதுடன் அதிக தண்ணீர் மற்றும் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது நல்லது.

தலைவலி மற்றும் மயக்கம்

கர்ப்ப காலத்தில் தலைவலி மற்றும் மயக்கம் ஏற்படுவது ஒவ்வொருவரின் உடல் நிலை மற்றும் தனிப்பட்ட காரணிகளின் அடிப்படையில் மாறுபடலாம்.

இது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், இரத்த ஓட்டம் அதிகரிப்பு, மன அழுத்தம், மற்றும் குறைவான உறக்கம், போன்ற காரணிகளால் அதிகரிக்கக்கூடும். தலைவலி தொடர்ந்து இருந்தால், மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

Also Read:- https://karpagamhospital.in/tips-on-how-to-choose-the-right-birth-control-method-for-you/

கர்ப்ப காலத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

1. கர்ப்பத்தின் அறிகுறிகள் எப்போது தொடங்கும்? When Do Pregnancy Symptoms Start?

கர்ப்பத்தின் முதலாவது அறிகுறிகள் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் தோன்றலாம், ஆனால் பெரும்பாலும் தவறிய மாதவிடாய் (missed period) கழித்து அதிகமாக நீங்கள் உணரக்கூடும்.

2. வயிற்று வலி கர்ப்பத்தின் அறிகுறியா? – Is Stomach Pain a Symptom of Pregnancy?
ஆம், வயிற்று வலி கர்ப்பத்தின் ஆரம்ப காலங்களில் சில பெண்கள் அனுபவிக்கக் கூடும். இது ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் கருப்பை விரிவடைதல் போன்ற காரணங்களால் ஏற்படக்கூடும்.

இந்த அறிகுறி ஆபத்தானது அல்ல, ஆனால் வலி அதிகரிக்கவோ, மற்ற அறிகுறிகளோ இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் தேவையான சிகிச்சையைப் பெறுங்கள்.

3. மாதவிடாய் தவறுவதற்கு முன் ஏற்படும் கர்ப்பத்தின் அறிகுறிகள் என்ன? – What Are the Pregnancy Symptoms Before a Missed Period?
மாதவிடாய் தவறுவதற்கு முன் கர்ப்பிணிப் பெண்களிடம் பின்வரும் அறிகுறிகள் காணக்கூடும்.

  • லேசான இரத்தக் கசிவு (Implantation bleeding)
    தூக்கமின்மை
  • வயிற்று எரிச்சல் மற்றும் மனநிலை மாற்றங்கள்
  • மலச்சிக்கல், வயிறு வீக்கம், மற்றும் வாயு பிரச்சனைகள்
  • தசை வலி மற்றும் லேசான வயிற்று வலி
  • திடீர் உணவு விருப்ப மாற்றங்கள்

4. கர்ப்பத்தின் முதல் அறிகுறிகள் என்ன? – What Are the First Symptoms of Pregnancy?

  • மாதவிடாய் தவறுதல்
  • குமட்டல் மற்றும் வாந்தி உணர்வு (Morning Sickness)
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  • மார்பு வலி மற்றும் அழுத்தம்
  • அளவுக்கு அதிகமான சோர்வு மற்றும் தூக்கமின்மை

5. கர்ப்பத்தின் அறிகுறிகள் எப்போது ஆரம்பிக்கலாம்? – How Early Can Pregnancy Symptoms Start?
பெரும்பாலும் பெண்களுக்கு கருத்தரித்த 6 முதல் 10 நாட்களுக்குள் கர்ப்ப அறிகுறிகள் தோன்றும்.

6. கர்ப்பத்தின் அறிகுறிகளை உறுதிப்படுத்துவது எப்படி? – How to Confirm Pregnancy Symptoms? – அறிய வேண்டியவை

  • மாதவிடாய் தவறிய 1 வாரம் கழித்து கர்ப்ப சோதனை கருவி (Home Pregnancy Test) உபயோகித்து கர்ப்பம் உறுதி செய்யலாம்
  • மருத்துவரின் ஆலோசனை பெற்று இரத்த பரிசோதனை (Blood Test) மூலம் உறுதி செய்யலாம்.
  • மருத்துவரின் ஆலோசனையுடன் கூடிய அல்ட்ராசவுண்ட் (Ultrasound) சோதனை மூலம் கர்ப்பநிலை உறுதி செய்யலாம்.

7. மார்பு வலி கர்ப்பத்தின் அறிகுறியாக இருக்குமா? Is Breast Pain a Symptom of Pregnancy?
ஆம், கர்ப்பம் தரித்தவுடன் ஹார்மோன் மாற்றங்களால் மார்பு வலி மற்றும் மார்பகங்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். இது கர்ப்பத்திற்கான அறிகுறியாகும்.

முடிவு:

நீங்கள் கர்ப்பமாக இருப்பதாக சந்தேகித்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் கர்ப்ப பரிசோதனை செய்து கர்ப்பம் உறுதிப்படுத்துவது அவசியம்.

கற்பகம் மருத்துவமனை கோயம்புத்தூரில் உள்ள சிறந்த மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவமனைகளில் ஒன்றாகும். எங்கள் மகப்பேறு மருத்துவர்கள், கர்ப்ப காலத்திலும் குழந்தை பிறந்த பிறகும் சிறந்த பராமரிப்பை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர்.

அறிவிப்பு:

இந்த வலைப்பதிவில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கான மாற்றாகக் கருதப்படக் கூடாது. எந்தவொரு மருத்துவப் பிரச்சினை பற்றியும் சந்தேகங்கள் இருந்தால், எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிபெற்ற மருத்துவ நிபுணரின் ஆலோசனை பெறவும். நீங்கள் இந்த வலைப்பதிவில் படித்ததன் அடிப்படையில் மருத்துவ ஆலோசனையைப் புறக்கணிக்கவோ அல்லது தாமதிக்கவோ கூடாது.

Related Posts